இரட்டைத் திறவு முறமை (2FA எனச் சுருக்கமாக
அழைக்கப்படும்) ஆனது உமது இணையக் கணக்க்குகளான வங்கி, மின்னஞ்சல் அல்லது சமூக
வலைத்தளங்களினுள் உண்மையாகவே நீங்கள் தான் உள்நுழைகின்றீர்களா என இரு தடவை
பரிசோதிப்பதற்கான சேவையை வழங்குவதே ஆகும்.
நீங்கள் உங்களது இணையக்
கணக்குகளுள் பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவதானது
ஒற்றைத் திறவு முறை என அழைக்கப்படும். இதன்போது நீங்கள் நீங்கள் தானா என உறுதி
செய்வதற்கு ஒரு பொருளே தேவைப்படுகின்றது.

இரட்டைத் திறவு
முறமையானது திறவு முறையின் போது மேலும் ஒரு அடுக்குப் பாதுகாப்பினை ஒரு தனி நபரின்
இலத்திரனியல் கருவி அல்லது இணையக் கணக்குகளின் தகவல்களைப் பறிக்க
எத்தனிப்பவர்களுக்கு எதிராக வழங்குகின்றது, ஏனெனில்
பாதிப்புக்குள்ளாகப் போகிறவரின் கடவுச்சொல்லை அறிவதன் மூலம் மாத்திரம் அங்கீகாரப்
பரிசோதனையில் தேர்ச்சி பெற் முடியாது.
இதன்போது உள்நுழைவதற்கு
மேலும் ஒரு படி தேவையானபோதும், உங்களது கணக்கிற்கு இதன்போது மேலதிக பாதுகாப்பானது
கிடைக்கின்றது. உங்களது கடவுச் சொல்லானது திருடப்பட்டு (உங்களது அனுமதியின்றி
வேறொருவர் உள்நுழையும் போது) உங்கள் கணக்கானது 2FA இனைக் கொண்டிருப்பின்
இணையத் திருடனால் உங்கள் கணக்கிற்குள் உள்நுழைய முடியாமற் போகும். அவர்களுக்கு
இரட்டைத் திறவு நிலைகளும் தேவைப்படும்.
2FA இனை எவ்வாறு
செயற்படுத்துவது
சில இணையச் சேவைகளானது
தானியக்க முறைமையின் மூலமாகவே இரட்டைத் திறவு முறைமையைச் செயற்படுத்தத் தூண்டும்.
எவ்வாறாயினும் பல சேவைகள் இவ்வாறு செயற்படுத்தத் தூண்டாததால் நீங்களே இதனை
செயற்படுத்த வேண்டி ஏற்படும். உங்களது இணையக் கணக்கின் 2FAயினைச் உங்கள் கணக்கின் security அல்லது privacy settingsற்குச் சென்று
செயற்படுத்த முடியும். (இதனை “இரட்டைத் திறவு முறைமை அதிகாரமளித்தல்” எனவும்
அழைக்க முடியும்.
உங்களுக்குத்
தெரிந்த, உங்களிடமுள்ள
அல்லது உங்களை அடிப்படையாகக் கொண்ட வெவ்வேறு வகையான 2FAக்களை செயற்படுத்த
முடியும். உதாரணமாக
- உங்களது தொலைபேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி
- கேட்கும்போது உங்களுக்கு மாத்திரம் தெரிந்த பதிலைக் கொண்ட உங்களால் அமைக்கப்பட்ட பாதுகாப்புக் கேள்விகள்,
- தற்காலிகமாக பாதுகாப்புக் குறிகளைத் தயாரிக்கக் கூடிய உள்நுழைவுக் குறிகளைத் தயாரிக்க்கூடிய சாதனம்.
- உங்களது கையடக்கத் தொலைபேசி அல்லது கைக் கணணிக்கு தற்காலிகப் பாதுகாப்புக் குறியை அனுப்பக் கூடிய அங்கீகரிப்பு மென்பொருள். இதனை நீங்கள் நிறுவும்போது இதே மென்பொருளை நீங்கள் இந்த 2FA சேவையினை வழங்கும் எந்தவொரு கணக்கிலும் பயன்படுத்த முடியும்.
- கைவிரல் அடையாள வருடிகள்
- ஒலி இனங்காணல்
உதாரணமாக GMAIL போன்ற இணையக் கணக்குகள், நீங்கள் 2FAக்கு மாறும் போது காப்பு
நகற் குறியீட்டு பட்டியலொன்றையே வழங்கும். குறியீடொன்றினைக் கேட்கும்போது
உங்களுக்கு இதில் ஏதாவதொன்றைத் தெரிவுசெய்ய முடியும், ஆனாலும் ஒவ்வொரு
குறியீட்டையும் ஒரு தடவை மாத்திரமே பயன்படுத்த முடியும், அவ்வேளையில் நீங்கள்
அனைத்தையும் பயன்படுத்தின் அதன்பின்னர் மேலும் அதிகமான குறியீடுகளை நீங்கள்
உருவாக்க வேண்டும். தொலைபேசி மற்றும் நேரடியாக உள்நுழைய எத்தனிக்காதவர்களுக்கு இது
மிகவும் பிரயோசனமானதாக அமையும். நீங்கள் உங்களது இரகசியக் குறியீடுகளை பாதுகாப்பாக
நீங்கள் எங்காவது சேமித்து வைக்க வேண்டும்.
சிபாரிசுகள்
- உங்களால் முடியுமானவரையில் இரட்டைத் திறவு முறமையைச் (2FA) செயற்படுத்தவும்
- பலமான கடவுச் சொல் / கடவு வசனங்களை பயன்படுத்துவதுடன் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்
- பல இணையத்தளங்களுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.
- உங்களது கடவுச்சொல் மற்றும் உள்நுழைவுத் தகவல்களை பாதுகாத்து வைப்பதற்கு கடவுச்சொல் நிர்வாகியைப் பயன்படுத்தவும்.
வளப்பகிர்வு
0 Comments