பேஸ்புக் சமூக தரநிலைகளுக்கு எதிரான கொடுமைப்படுத்துதல் / துன்புறுத்தல், ஆள்மாறாட்டம், நேரடி அச்சுறுத்தல்கள், பாலியல் வன்முறை மற்றும் சுரண்டல் அல்லது வேண்டா அஞ்சல் போன்ற தகவலை நீங்கள் பெற்றால் எப்போதும்முறைப்பாடு செய்வதற்கு நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள். (முறைப்பாடு செய்த நபர் தொடர்பில் எதிராளிக்கு அறிவிக்கப்படாது)
மெசஞ்சர் வழியாக நடக்கும் எதுவாவது ஒருவரது உடனடி ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரு போலீஸ் அறிக்கை / முறைப்பாட்டினை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், அவர்களது உரையாடலைப் புறக்கணிப்பதன் மூலமோ அல்லது அவர்களை தடை செய்வதன் மூலமாகவோ அதனை தவிர்த்துக்கொள்ள முடியும் . உரையாடலை எவ்வாறு புறக்கணிப்பது மற்றும் ஒருவரிடமிருந்து செய்திகளை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி அறிந்து கொள்க.
மெசஞ்சரில் இடம்பெறும் உரையாடலைப் பற்றி நீங்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்கிறீர்கள் அல்லது முறைப்பாடு செய்கிறீர்கள்?
மெசஞ்சரில் உரையாடலைப் பற்றிய கருத்துக்களை அனுப்ப அல்லது முறைப்பாடு செய்வதற்கான படிமுறைகள் இங்கே:
அன்ட்ரோயிட்:
- உரையாடலைத் திறந்து மேலே உள்ள நபரின் பெயரைத் தட்டவும்.
- கீழே உருட்டி, Something’s Wrong இனைத் தட்டவும்.
- தவறு என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- Send Feedback என்பதைத் தட்டவும்.
- உரையாடலை மதிப்பாய்வுக்கு அனுப்ப Report Conversation ஐ தெரிவு செய்து Report Entire Conversation ஐ தட்டவும்
ஐபோன் அல்லது ஐபாட்:

மெசஞ்சரில் உங்களைப் போலவோ அல்லது வேறொருவரைப் போலவோ காட்டிக்கொள்ளும் ஒருவர் மீது நீங்கள் எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
போலி கணக்குகள் மெசஞ்சரில் அனுமதிக்கப்படவில்லை. ஆகையால்,உங்களைப் போலவோ அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறொருவரைப் போலவோ அல்லது ஒரு பொது நபரை (எடுத்துக்காட்டாக: பிரபல்யங்கள் அல்லது அரசியல்வாதி) போலவோ காட்டிக்கொள்ளும் கணக்கைக் கண்டால், நீங்கள் பின்வருமாறு முறைப்பாடு செய்யலாம் ;
அன்ட்ரோயிட்:
- Chats இனைத் திறந்து மேலே உள்ள நபரின் பெயரைத் தட்டவும்.
- கீழே உருட்டி, Something’s Wrong இனைத் தட்டவும்
- வகையில் Pretending to Be Someone இனைத் தேர்ந்தெடுக்கவும்.
- அவர்கள் யாயாரைப் போலக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, Send Feedback என்பதைத் தட்டவும்.
- உரையாடலை மதிப்பாய்வுக்கு அனுப்ப Report Conversation ஐ தெரிவு செய்து Report Entire Conversation ஐ தட்டவும்
ஐபோன் அல்லது ஐபாட்:
- Chats இனைத் திறந்து மேலே உள்ள நபரின் பெயரைத் தட்டவும்.
- கீழே உருட்டி, Something’s Wrong இனைத் தட்டவும்
- வகையில் Pretending to Be Someone இனைத் தேர்ந்தெடுக்கவும்.
- அவர்கள் யாயாரைப் போலக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, Send Feedback என்பதைத் தட்டவும்.
- உரையாடலை மதிப்பாய்வுக்கு அனுப்ப Report Conversation ஐ தெரிவு செய்து Report Entire Conversation ஐ தட்டவும்
உரையாடலை வீண்செய்தியாக (Spam) முறைப்பாடு செய்வதற்கான படிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- உரையாடலைத் திறந்து மேலே உள்ள நபரின் பெயரைத் தட்டவும்.
- கீழே உருட்டி, ஏதோ தவறு (Something’s Wrong) இனைத் தட்டவும்.
- Other என்பதை தெரிவு செய்து Spam இனைத் தட்டவும்.
- Send Feedback இனைத் தட்டவும்.
மூலம் :
0 Comments