හිතවතී වට්ස්ඇප් සහ වයිබර් අංකය +94777711 (කාර්යාල වේලාවන්හි දී)199

හිතවතී වට්ස්ඇප් සහ වයිබර් අංකය (කාර්යාල වේලාවන්හි දී) - 07777 111 99

COVID–19 இனை வெல்வோம் !!!

எச்சரிக்கையாக இருங்கள்…. தயாராகுங்கள்… பொறுப்புடன் செயல்படுங்கள்


உலகெங்கிலும் தீவிரமடையும் COVID-19 (கொரோனா வைரஸ்) தொற்றுநோய் பரம்பலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.முன்னோக்கி செல்ல சில படிகள் இங்கே:


  • சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினர் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • சரியான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும்
  •  எப்பொழுதும் கைகளை சவர்க்காரம் மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்
  • நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் முகமூடிகளை அணியுங்கள்
  • முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்
  • நீங்கள் ஒரு வெளிநபரை சந்திக்க நேர்ந்தால் எப்போதும் சமூக இடைவெளியை பராமரிக்கவும். (எப்போதும் ஒரு மீட்டர் தூரத்திலான இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்)
  • முடியுமானவரை ஒன்லைன் வங்கிச் சேவையை பயன்படுத்துங்கள்
  • ஏடிஎம்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்
  • ஒருபோதும் வெளிநபர்களுடன் எதனையும் பகிர வேண்டாம்
  • நாங்கள் பயன்படுத்துவதை எப்போதும் சுத்தம் செய்யுங்கள்
  • உங்கள் கணினி / இணையத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்ய முடிந்தால், அதற்குச் செல்லுங்கள். மேலதிக தகவலுக்கு உங்கள் நிறுவனத்தின் கணினி நிர்வாகியை தொலைபேசி வழியாக அணுகவும்

பின்வரும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புடன் இருங்கள், குறிப்பாக நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போது;

கவனமாக இருங்கள் ! ஒரு கண் வைத்திருங்கள்! சில இணைய மோசடியாளர்கள் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி உங்களை ஒன்லைன் மோசடிகளில் சிக்க வைக்க முயற்சிப்பார்கள்.

  • சாத்தியமான இணைய மோசடிககளும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பதும் என்பது தொடர்பிலான விளக்கம் இங்கே. நீங்கள் பெறும் மின்னஞ்சல்களைப் பற்றி அதிக கவனமாக இருங்கள். (மோசடி மின்னஞ்சல்களை எவ்வாறு கண்டறிவது)
  • உங்கள் கடவுச்சொல்லை எந்த வகையிலும் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
  • ஒன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் கையாளும் வலைத்தளம் உண்மையான நிறுவனம் / வங்கி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். (இணையத்தில் அசல் இணையத்தளத்தைப் போலவே தோற்றமளிக்கும் பல போலி இணையத்தளங்கள் உள்ளன) மேலதிக தகவலுக்கு இந்த கட்டுரையைப் பார்க்கவும்.
  • நீங்கள் / உங்கள் பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்தலாம். இணையத்துடன் தொடர்புடைய பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்த கட்டுரையிலிருந்து அறிக.
எனவே, கொரோனாவுக்கு எதிராக ஒரு தேசமாக நடைமுறைக்கேற்ப போராடுவதற்கு எங்கள் பங்களிப்பை வழங்குவோம்.
இது தொடர்பிலான மேலதிக விவரங்களை வழங்கி  நாங்கள் உங்களைப் புதுப்பித்துக்கொள்வோம். எங்கள் www.facebook.com/hithawathi பேஸ்புக் பக்கத்தில் எங்களுடன் இணைந்து  இருங்கள்.

Post a Comment

0 Comments