හිතවතී වට්ස්ඇප් සහ වයිබර් අංකය +94777711 (කාර්යාල වේලාවන්හි දී)199

හිතවතී වට්ස්ඇප් සහ වයිබර් අංකය (කාර්යාල වේලාවන්හි දී) - 07777 111 99

தனியுரிமையும் பாதுகாப்பும்

உங்கள் செயலில் உள்ள நிலையைக் கட்டுப்படுத்தல்:

நீங்கள் பின்வருமாறு ‘செயலில்’ இருப்பதைக் காண உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம்;

அன்ட்ரோயிட் :


  1. Chats இல் மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  2. செயலில் உள்ள நிலையை (Active Status) இனத் தட்டவும்.
  3. உங்கள் Active Status (செயலில் உள்ள நிலையை)  இயக்க (on) அல்லது முடக்க(off) செய்ய  திரையின் மேற்புறத்தில் உள்ள மாற்றத்தைப் பயன்படுத்தவும்.
  4. உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்த, on அல்லது off இனைத் தட்டவும்.






ஐபோன் அல்லது ஐபாட்:

  1.  Chats, இல் மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  2. Active Status இனத் தட்டவும்.
  3. உங்கள் Active Status  இயக்க (on) அல்லது முடக்க(off) செய்ய  திரையின் மேற்புறத்தில் உள்ள மாற்றத்தைப் பயன்படுத்தவும்.
  4. உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்த, on அல்லது off இனைத்  தட்டவும்.


நீங்கள் யாருடன் அளவளாவுகிறீர்கள்   என்பதைக் கட்டுப்படுத்தல்:

செய்தியிடல் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் உங்கள் இலக்கத்திற்கு  செய்திகளை அனுப்பக்கூடிய நபர்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம்:

  1. Chats, லிருந்து, மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவர புகைப்படத்தைத் தட்டவும்.
  2. செய்தியிடல் அமைப்புகளைத் தட்டவும்.
  3. இயக்க அல்லது முடக்க உங்கள் தொலைபேசி எண்ணைக் கொண்ட நபர்களுக்கு அடுத்து தட்டவும்.



உங்கள் கதை(Story)யை யார் காணலாம் என்பதைத் தனிப்பயனாக்குங்கள்:

பின்வரும் படிமுறைகளின் மூலமாக உங்கள் கதை(Story)யை யார் பார்க்க முடியும் மற்றும் பார்க்க முடியாது என்பதை நீங்கள் தெரிவு செய்யலாம்.

  1. மெசஞ்சரில், மேல் இடது மூலையில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  2. கீழே உருட்டி கதையைத்(Story)தட்டவும்.
  3. பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் இணைப்புகள், நண்பர்கள் அல்லது வழமை ஆகியவற்றில் ஒன்றை தெரிவு செய்க.
  4. சேமி(Save) என்பதைத் தட்டவும்.


உங்களை  தொடர்பு கொள்பவர்களில்  விரும்பாதவர்களைத் தடுக்க, மறைக்க அல்லது முடக்குவதற்கு :

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளின்படி அறிவிப்புகளைத் தடுப்பது, புறக்கணிப்பது / மறைப்பது அல்லது முடக்குவதன் மூலம் விரும்பாத நபர்களுடன் இணைவதை  நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

ஒருவரிடமிருந்து  கிடைக்கப்பெறும் செய்திகளைத் தடுக்க:

ஐபோன் அல்லது ஐபாட்:

  1.  Chats, இல், நீங்கள் தடுக்க விரும்பும் நபருடனான உரையாடலைத் திறக்கவும்.
  2. உரையாடலின் மேலே அவர்களின் பெயரைத் தட்டவும்.
  3. கீழே உருட்டி, Block இனைத்  தட்டவும்
  4. மெசெஞ்சரில் Block on Messenger இனை தெரிவு செய்து   Block ஐ தட்டவும் .


அன்ட்ரோயிட்:

  1. Chats, இல், நீங்கள் தடுக்க விரும்பும் நபருடனான உரையாடலைத் திறக்கவும்.
  2. உரையாடலின் மேலே அவர்களின் பெயரைத் தட்டவும், பின்னர் Block இனைத்  தட்டவும்.
  3. மெசெஞ்சரில்  Block on Messenger இனை தெரிவு செய்து   Block ஐ தட்டவும் .




உரையாடலைப் புறக்கணிக்க:

ஐபோன் அல்லது ஐபாட்:

  1. Chats, இல், நீங்கள் புறக்கணிக்க விரும்பும் உரையாடலைத் திறக்கவும்.
  2. உரையாடலின் மேலே உள்ள பெயரைத் தட்டவும்.
  3. கீழே உருட்டவும், செய்திகளைப் புறக்கணி(Ignore Messages) இனைத் தட்டவும், பின்னர்  மீண்டும் செய்திகளைப் புறக்கணி(Ignore Messages) இனைத் தட்டவும்.

அன்ட்ரோயிட்:

  1. Chats, இல், நீங்கள் புறக்கணிக்க விரும்பும் உரையாடலைத் திறக்கவும்.
  2. உரையாடலின் மேலே உள்ள பெயரைத் தட்டவும்.
  3. கீழே உருட்டவும், செய்திகளைப் புறக்கணி(Ignore Messages) இனைத் தட்டவும், பின்னர் மீண்டும் புறக்கணி(Ignore) இனைத் தட்டவும்.




அறிவிப்புகளை நிறுத்துவதற்கு

ஐபோன் அல்லது ஐபாட்:

சகல உரையாடல்களுக்கும் மெசஞ்சர் அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :

  1. Chats, இல், மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  2. Notifications & Sounds இனைத் தட்டவும்.
  3. Do Not Disturb இற்கு அடுத்து தட்டவும்.
  4. அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்க.

ஒரு உரையாடலுக்கான அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :

  1. Chats, இல் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
  2. இனைத் தட்டி அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்க.


அன்ட்ரோயிட்:

சகல உரையாடல்களுக்கும் மெசஞ்சர் அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :

  1.  Chats, இல், மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  2. Notifications & Sounds இனைத் தட்டவும்.
  3. அவற்றை நிறுத்துவதற்கு On ற்கு அடுத்து தட்டவும்
  4. அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்து Ok இனைத் தட்டவும்




ஒரு உரையாடலுக்கான அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :

  1.  Chats இல் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
  2.  இனைத் தட்டி அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்க.
  3. OK இனைத் தட்டவும்.


விண்டோஸ்

மெசஞ்சர் அறிவிப்புகளை இயக்க அல்லது முடக்க:

  1.  இனைக் கிளிக் செய்க.
  2. Notifications ஐக் கிளிக் செய்க.
  3. Do not disturb க்குக் கீழே கிளிக் செய்க.


ஒரு உரையாடலுக்கான அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :

  1. உரையாடலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் இனைக் கிளிக் செய்க .
  3. Mute Notifications இனைத் தெரிவு செய்க.
  4. அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்து Confirm இனைக் கிளிக் செய்க .


குறிப்புகள் :
https://www.facebook.com/help/messenger-app/1064701417063145/?helpref=hc_fnav&bc[0]=691363354276356

Post a Comment

0 Comments